ஸ்ரீநகர்:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், ஸ்ரீநகரில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் 75 மாவட்டங்கள் வழியாக பயணம் மேற்கொண்ட அவர், ஜம்மு-காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

இன்று நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயண நிறைவு விழாவில் காங்கிரஸ் சார்பில் 23 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சில தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

திமுக உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.