புதுடெல்லி:
நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை இக்கூட்டத்தில் மத்திய அரசு கோர உள்ளது.

இதைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.இதில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வியூகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.