டில்லி:

ஸ்சி. எஸ்டி. பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி இன்று நாடு முழுவதும் பந்த் நடத்த சில அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

அதன் காரணமாக வட மாநிலங்களில்  பல இடங்களில் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீகாரில் முழுஅடைப்பின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

பீகாரின் அரா என்ற நகரில், பந்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் மற்றும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை தடுக்க முயற்சிக்கும் போது போராட்டக்காரர்க ளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலையடுத்து போராட்டக்காரர்கள் கற்களை வீசி வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர்.   இதில் 12க்கும் அதிகமானோர் காய மடைந்தனர். இதனையடுத்து மோதலை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து அங்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில்  இணையதள சேவை துண்டிக்கப்பட்டன.

பரிதாபாத் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. பல இடங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில், அதிகளவில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறுபவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2ந்தேதி பாரத் பந்த் நடத்தப்பட்ட நிலையில் இன்று 2வது முறையாக பாரத் பந்த் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அப்போது நடைபெற்ற கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியான சோகமும் நடைபெற்றது.