சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை பொதுமக்களும் பெரிய அளவில் பின்பற்றவில்லை, போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்  இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதன் தீர்ப்பில், “ஜூலை 1ஆம் தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம். அணியாதவர்  ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
a
இந்நிலையில், தலைமை நீதிபதி கவுல், “சாலையில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் மாணவர்கள் கூட தலைக்கவசம் அணிந்து செல்வதில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. எந்த சட்டத்தையும் முறையாக, தொடர்ந்து பின்பற்ற அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.  ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”  உத்தரவிட்டுள்ளார்.
பொது இடத்தில் புகைபிடிப்படவர்களை கண்டும் காணாமல் விட்டுக்கொண்டிருந்த காவல்துறை சமீபத்திய நீதிமன்ற உத்தரவை அடுத்து தீவிரமாய் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதே போல இனி, ஹெல்மெட் அணியாதவர்களை பிடிப்பதிலும் காவல்துறை அக்கறை செலுத்தும்.
ஆகவே, இருசக்கர ஓட்டிகளே… இனி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர்கள்.