2016ம் வருடம் ஜூன் 23ம் தேதி வெளியிட்ப்பட்ட செய்தி:

 

ரஜினி
ரஜினி

திருச்சி:  
‘நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்’ என்று, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்  அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு  தெரவித்ததாவது:
“ 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு  கவர்னரை சந்தித்து, மனு அளித்த அவர்,  ‘நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன்’ என்று, அறிவித்தார்.
ஒரு கோடி தருவதாக ரஜினி அறிவித்த உண்ணாவிரத நிகழ்ச்சி
ஒரு கோடி தருவதாக ரஜினி அறிவித்த உண்ணாவிரத நிகழ்ச்சி

ஆனால்  14 ஆண்டுகள்  ஆகியும் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ ரஜினி அளிக்கவில்லை. தற்போது  மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்படுகின்றனர்.
ஆகவே ரஜினி,  தான்  அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க வேண்டும். இது குறித்து   அவரது வீட்டில் மனு  கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்” என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.