download
நடிகரும், சமத்துவமக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுதிறது. சரத்குமாருக்கு நெருங்கிய வட்டாரத்தில், “சரத்துக்கு நெஞ்சுவலி இல்லை. சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை. தவிர நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்குச் சென்றார்” என்று கூறுகிறது.