கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அரசு கொண்டு வந்த ஃப்ளக்ஸி -ஃபேர் கட்டணமுறை காரணமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 400-450 காலி சீட்கள் இருந்தாலும் அது இன்னும் ரூ.900 மற்றும் 950 கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. முதல் 10% சீட்களுக்கு (அதாவது சுமார் 70 சீட்கள் வரை) ரூ.605 வசூலிக்கபடுகிறது. இதில் ரூ 197 வரியாக பிடிக்கப்படுகிறது. இணையத்தில் பதிவு செய்யும்போது சில சர்வீஸ் கட்டணங்களும் வசூலிக்கப்படும்.

shadhabthi

ஃப்ளக்ஸி -ஃபேர் கட்டணமுறை பிரீமியம் ரயில்களுக்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி அடிப்படை கட்டணம் ஒவ்வொரு 10% பெர்த்கள் விற்ற பிறகும் தலா 10% உயர்த்தப்படும், இதற்கு உச்ச வரம்பு உண்டு.

shadhabthi1

சண்டிகாரில் இருந்து டெல்லி வந்த சதாப்தி(12046), ரயிலுக்கு கடந்த செவ்வாயன்று பயணிகள் சுமார் ரூ.795 செலுத்த வேண்டியிருந்தது. பெர்த்கள் காலியாக உள்ள நிலையிலும் 50% வரை அதிகம் கட்டணம் செலுத்துவது பற்றி பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.