ஜெனிவா: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்ற பரவலை தடுக்கும் நோக்கில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதை எடுத்துக்கொள்வதில் பல நாட்டுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பீர்,  கஞ்சா, டோனட், ஐஸ்கிரிம் போன்ற உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என சில நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அறிவிப்பு  வெளியிட்டுள்ளன. இது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன

தொற்று பரவலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று நோக்கில்,  ஓஹியோ மாகாணத்தில்,  தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பீர் இலவசமாக வழங்கப்படும் என அங்குள்ள சாமுவேல் ஆடம்ஸ் பீர் ( Samuel Adams beer)  நிறுவனம்  அறிவித்து உள்ளது.

பயனர்கள் இந்த சலுகையைப் பெற, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும்  என்றும் கண்டிஷன் போட்டுள்ளது.

அதுபோல, மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மரிஜுவானா உற்பத்தி நிறுவனமும் இளைஞர்களுக்கு கஞ்சாவையும் வழங்கி வருகிறது.

கிறிஸ்பி கிரீம் டோனட்ஸ் என்ற நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவசமாக டோனட்டை வழங்குகிறது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச ஐஸ்-கிரீம் வழங்கப்படுகின்றது.

இலவசம் என்றால்தான் மக்கள் எதையும் பெற ஆர்வம் காட்டுவார்கள் போலும்….