கர்ப்பிணிப் பெண்கள் ஐ ப்ரோ செய்யலாமா?

Must read

பியூட்டிசியன் ஹேமா பாண்டியன் வழங்கும் அழகு குறிப்புகள்:

ர்ப்பிணி பெண்களுக்கு, பொதுவாக முதல் மூன்று மாதங்கள் வாந்திவருவது இயற்கை. இதனால் அவர்களுக்கு எந்த உணவும் உண்ணமுடியாது. தண்ணீர் குடித்தால் கூட வாந்திவரும் ஆகவே, நீர்ச்சத்து குறைந்து உடல் சோர்ந்திருக்கும். இந்த காலத்தில் அழகும் ஆரோக்கியமும் குறைந்து, தோல் வரட்சியாக காணப்படும்.

இந்த காலகட்டங்களில் உடலின் ஈரத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள நீர் சத்து அதிகமுள்ள எலுமிச்சை, சாத்துகுடி,தர்பூசணி ஜூஸ் வகைகள், மோர், இளநீர் குடிப்பது நல்லது.

புதினா புளி சேர்த்த துவையலும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இவை ஜீரணத்துக்கு நல்லது.

அழகை பராமரித்தல்.;

குங்குமப்பூவை பாலில் கலந்து தினமும் இரவு சாப்பிட்டு வரலாம். குங்குமபூவின் மூன்று  இதழ்களை மட்டும் சேர்த்தால் போதும். அதிகமாக சேர்த்துவிட்டால் உடலில் சூடு அதிகரிக்கும்.

குங்குமப்பூவால் என்ன பலன்?

ஜீரணசக்தி அதிகரிக்கும். மேலும், வயிற்று புண் மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சணையை தீர்க்கும். வாயு பிரச்சினையைப் போக்கி நுரையீரலுக்கு வலு சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முக்கியமாக மலசிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கலே பலவித நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆகவே நோய்களில் இருந்து தப்பலாம். குறிப்பாக முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

மேலும், குங்குமப்பூ, நமது உடலில் கொழுப்பை தங்கவிடாது. இரத்தம் சுத்திகரிக்கப் படுவதால் தோல்கள் மிளிரும்.

அதே நேரம், தரமான ஒரிஜினல் குங்குமப்பூவை தேடிப்பிடித்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

குங்குமப்பூ பத்து வருடங்களில்  6 வருடங்கள் மட்டுமே விளையும். ஆகவே போலிகள் அதிகம் புழங்குகின்றன.

தரமான குங்குமப்பூவை எப்படி அறிவது?

ஒரிஜினல் என்றால் சுடுதண்ணீரில் போட்டால் தங்க நிரத்தில் மாறும். இதுவே சிவப்பு நிறத்தில் மாறினால் அது போலி.

ஐப்ரோ…

ஐந்து மாதங்கள் வரை கர்ப்பணி பெண்கள் ஐ ப்ரோ செய்து கொள்ளக்கூடாது.ஐ ப்ரோ பண்ணும்போது நரம்புகள் இழுக்கப்படுவதால் அது கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

(அடுத்த வாரம் சந்திப்போம்)

 

More articles

Latest article