சென்னை,

த்தாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் கத்தாரில் பணியாற்றி வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், கத்தாரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, அங்கு பணியாற்றி வரும் 6.5 லட்சம் இந்தியர்களின்  வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும், அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் 65% அளவிற்கு கத்தாரிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரின் டாப் ஏற்றுமதி நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது…

 

‘இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தீவிரவாதத்தை வளர்க்கிறது’ என்று கூறி கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.