புதுடெல்லி:  
ந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணி வீரர்களுக்கான புதிய உணவு முறை குறித்த அறிக்கையில்,  புதிய உணவு முறைகளில் எந்த வகையிலும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியைத் தேசிய கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  வீரர்கள் இறைச்சியை ‘ஹலால்’ வடிவில் மட்டுமே உட்கொள்ள அனுமதிக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
பிசிசிஐயின் இந்த முடிவு நெட்டிசன்களை பிளவுபடுத்தியுள்ளது. வாரியத்தின் இந்த நடவடிக்கையைப் பலர் விமர்சித்தாலும், சிலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“#BCCI_Promotes_Halal” டிவிட்டரில் டாப் ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது மற்றும் மக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவிக்கையில்,  இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி சாப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.