கர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை

Must read

பெங்களூரு:
ர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை பதவியேற்க ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வுகர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.இந்த ஆலோசனையின் இறுதியில் பசவராஜ் பொம்மையை கர்நாடக முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது

More articles

Latest article