சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்றி அடுத்த 12 மணி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 3 மணி நேரத்தில் 12மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது. மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் பள்ளி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில்   கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு மயிலாடுதுறை, கடலூர், கரூர் மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.

இந்நிலையில்,அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இது மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் இடையே வரக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரி,கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை,தென்மேற்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.