பெரும் சிக்கலில் நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும்: ராகுல் காந்தி விமர்சனம்

Must read

டெல்லி: நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பெரும் சிக்கலில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் ராகுல் காந்தி கூறி இருப்பதாவது:

நாட்டில் வங்கியின் வளர்ச்சி சிக்கலில் உள்ளது. அதேபோன்று நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சிக்கலில் தான் இருக்கிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

மக்களின் மன உறுதியும் நொறுங்கி போய், சமூக நீதியும் நாள்தோறும் நசுக்கப்படுகிறது. இது வளர்ச்சியா அல்லது அழிவா என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article