வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் – பெங்களூருவை இன்று சந்திக்கிறது!

Must read


ஷார்ஜா: இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கோலியின் பெங்களூரு அணியும், கேஎல் ராகுலின் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
தற்போதைய நிலவரப்படி புள்ளிப் பட்டியலில் பெங்களூரு அணி 3வது இடத்திலும், பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
பஞ்சாப் அணியில் இதுவரை களமிறங்காமல் இருந்த விண்டீஸின் கிறிஸ் கெய்ல், இன்றையப் போட்டியில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு ஒரு பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் போட்டியிலும், இனிவரும் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, பஞ்சாப் அணியால் பிளேஆப் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும் என்பதால், அந்த அணி இன்றையப் போட்டியில் ஆக்ரோஷம் காட்டும் என்றே கருதப்படுகிறது.
ஷார்ஜா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.
 

More articles

Latest article