பெங்களூர்: மாநகராட்சி மேயரானார் தமிழ்ப்பெண்!

Must read

பெங்களூரு:
நேற்று நடைபெற்ற பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடித்தார் தமிழ்பெண் ஒருவர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
கர்நாடகாவின் பெங்களூர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பெங்களூரின் 50வது மேயர் பதவிக்கான தேர்தல் இது. நகரின் மதிப்புமிக்க 50வது மேயராக தமிழ் பெண் பத்மாவதி  தேர்வு செய்யப்பட்டார்.
mayor
இந்த மேயர் பதவியின் ஆயுள் ஓராண்டு காலம் மட்டுமே.
காவிரி நீர் பிரச்சனையில் பெங்களூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ்பெண் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
2015-16ம் ஆண்டில் மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி பதவிக்காலம் செப்டம்பர் 10ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, மேயர் தேர்தல் செப்டம்பர் 28ம் தேதிக்கு  தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து தேர்தலை சந்தித்தது.  பாஜக தனித்து போட்டியிட்டது.   காங்கிரஸ் கூட்டணி  சார்பில் பத்மாவதியும், பாஜக சார்பில் லட்சுமியும் மேயர் தேர்தல்லி போட்டியிட்டனர்.
பெங்களூர் மாநகராட்சி மாமன்ற அரங்கில் நேற்று மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி ஜெயந்தி, மேயர் தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜி.பத்மாவதிக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் கைகளை உயர்த்துமாறுதெரிவித்தார். அவருக்கு 142பேர் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், பாஜக வேட்பாளர் லட்சுமிக்கு ஆதரவாக மொத்தம் 120 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேயர் பத்மாவதிக்கு கவுன்சிலர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பெங்களூரு மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜி.பத்மாவதி பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மெஜஸ்டிக் அடுத்த ஸ்ரீராமபுரம் ஏரியாவின், பிரகாஷ் நகர் வார்டில் இருந்து கவுன்சிலராக வெற்றி பெற்றவர். இதற்கு முன் 3 முறை கவுன்சிலராக பணியாற்றியுள்ளார்.
பத்மாவதியின் பூர்வீகம் தமிழகத்தை சேர்ந்த்தாக இருந்தாலும், அவர் பெங்களூருவில் பிறந்தவர். பெங்களூரு தமிழ்ச்சங்கத்துடன்  நல்ல தொடர்பில் உள்ளார். இவருக்கு ஜெயபால் என்ற கணவரும், சந்தோஷ், சந்தீப், சுனில் ஆகிய மகன்கள் உள்ளனர்.

More articles

Latest article