“பீஸ்ட் படத்துக்கு தடை! விஜய்க்கு எதிராக துவா!”: தடா ரஹீம் ஆவேசம்

Must read

“பீஸ்ட் படத்துக்கு தடை! விஜய்க்கு எதிராக துவா!”: தடா ரஹீம் ஆவேசம்
மற்றும் குடும்பத்தினருக்கு சாபம்! துவா செய்யப்போகும் தடா ரஹீம்!
இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பீஸ்ட் படத்துக்கு, தடை விதிக்க கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது ..
வீரராகவன் என்ற கதாநாயக கதாபாத்திரம் ஜோசப் விஜயும் , உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுகமும் நடித்து உள்ளனர்
படத்தில் உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எல்லாம் சிறிதும் திரைப்படத்தில் இல்லை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க இந்த கதாபாத்திரங்கள் இயக்குனர் நெல்சனுக்கு தேவைபட்டுள்ளது .
உமர் பாரூகின் தம்பி உமர் சரீப் சென்னை ஈசிஆரில் உள்ள ஷாப்பிங் மஹாலை ஹைஜாக் செய்து விட்டதால் அங்குள்ள மக்களை மீட்க இஸ்ரேல் உளவு அமைப்பான (மொஸாத்) இஸ்ரேலியர்களை உதவிக்கு அழைப்பது போன்ற காட்சியை பார்த்தால் முஸ்லிம்களை வில்லனாக காட்சி படுத்த யூதர்களை கதாநாயக கதாபாத்திரம் கொடுத்து உள்ளனர் ஜோசப் விஜயும் நெல்சனும் …
நகைச்சுவை திரைப்படமாக எடுக்க முயற்சி எடுத்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படத்தை முடித்து உள்ளார் நெல்சன்
காவி ஸ்கீரின் கிழிப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டு பேனர் கிழிப்பு காட்சி அமைத்து உள்ளனர் காரணம் மத்திய பாஜக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமே என்ற அச்சமாக இருக்கலாம் ..
வில்லன் உமர் சரீபை , விஜய் அடிக்கும் காட்சியின் போது தியேட்டரில் படம் பார்க்கும் ஜோசப் விஜயின் ரசிகர்கள் விடாதே அடி கொல்லு என ஆக்ரோஷமா கூச்சல் போடுவதை பார்த்தால் பீஸ்ட் திரைப்படம் ஜோசப் விஜய் மற்றும் நெல்சன் இணைந்து நடத்திய திரைப்பட சிலுவை போர் என்றால் அது மிகையாகாது ..
பீட்ஸ் திரைப்படத்தை உடனே தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் மற்றும் நடிகர் ஜோசப் விஜய் இயக்குனர் நெல்சன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் ..
உயர்நீதிமன்றம் மூலம் பீஸ்ட் திரைப்படத்தை தடை விதிக்க எங்களது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம் மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக பீஸ்ட் திரைப்படத்தை தடை கோரி வழக்கு தொடுக்க உள்ளோம்
ரமலான் நோன்பு இருப்பதால் நடிகர் ஜோசப் விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்த முடியாதா சூழ்நிலை உள்ளது ஆகவே இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் போது நடிகர் ஜோசப் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவனின் சாபம் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை (துவா) செய்யப்படும் ..” – இவ்வாறு தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article