download (1)
 
கமல்ஹாசன் படம் என்றால்,  பெயர் அறிவித்ததுமே பிரச்சனை உருவாகிவிடும்.  தேவர் மகன், ஹேராம், சண்டியர் (விருமாண்டி).. என்று ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம்.
 அது போல, கமலின் அடுத்தபடமான “பல்ராம்நாயுடுதிரைப்பட பெயர் பற்றியும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பிவிட்டன.
 “சாதி அடையாளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் கமல்” என்றும், “அப்படி ஏதுமில்லை” என்றும் இருவகை விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் உலாவருகின்றன.
943964_10207730444512600_5456883436705700938_n
 
 “பல்ராம் நாயுடு” படத்தலைப்பை விமர்சித்து பத்திரிகையாளர் Suguna Diwakar எழுதியுள்ள முகநூல் பதிவு:
“’தேவர் மகன்’ என்று படமெடுத்து தமிழில் சாதிப் பெயர்களைப் படத் தலைப்பாக வைக்கும் சகாப்தத்தைத் தொடங்கிவைத்தவர் கமல்ஹாசன். அதற்குப் பின்னால் தமிழ் சினிமாவில் நடந்த சாதியப் பெருமித அனர்த்தங்களும் அபத்தங்களும் அதிகம். இடைநிலைச் சாதிப் பெருமிதங்களுக்கு உரம் போட்டு வளர்த்த சினிமாக்கள் அதிகம் வந்தன.
இப்போதுதான் தமிழ் சினிமா அந்தமாதிரியான அபத்தங்களில் இருந்து விலகி வேறுதிசையில் நடைபோட முயலும்போது மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ என்று கமல்ஹாசன் சாதிப்பெயரை டைட்டிலாகச் சூட்டுவது நியாயமல்ல. தமிழில் டைட்டிலுக்கா பஞ்சம்?”
 
a
இதை மறுத்து திரைப்பட விமர்சகர் Suresh Kannan எழுதியுள்ள முகநூல் பதிவு:
“சபாஷ் நாயுடு – படத்தின் தலைப்பு வெளிவந்தவுடனேயே அது குறித்த நுண்ணரசியல் அலசல்களும் வரத்துவங்கி விட்டன. படத்தின் தலைப்பில் ஒரு சமூகத்தின் பெயர் இருக்கிறதாம்.
இனங்களும் சாதிகளும் மதங்களும் மனிதன் கூடி வாழத் துவங்கிய காலத்திலிருந்து அதன் பண்பாட்டுத் துளிகளால் மெல்ல மெல்ல தொகுக்கப்பட்டு உருவான சமூக அமைப்புகள். பல்லாண்டுகளாக இறுகி இறுகி கெட்டி தட்டிப் போன விஷயம். சாதியை ஒழிப்போம் என்பதெல்லாம் கேலிக்கூத்தான கோஷம். உண்மையில் சாதி போன்ற அமைப்புகள் இருப்பதில் தவறில்லை. அவை அந்தந்த இனக்குழுக்களின் பண்பாட்டு அடையாளங்கள் மட்டுமே. சாதி இல்லையென்றால் வேறு எந்த அடையாளத்திலாவது மனிதசமூகத்தில் பிரிவுகள் உண்டாகியே தீரும். இது இயற்கை.
ஆனால் எங்கே பிரச்சினை என்றால் சாதி குறித்த உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, அது குறித்த சீண்டல்கள், கற்பிக்கப்பட்ட உயர்வு, தாழ்வுகள், வன்முறைகள் போன்றவைகள்தான் பிரச்சினை. அவ்வாறான கற்பிதங்கள்தான் பகைமையை உண்டாக்குகின்றன.
ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளம் எல்லாவற்றின் மீதான விமர்சனங்களையும் பகடிகளையும் ஏற்றுக் கொள்வதே. அந்த வகையில் ஓர் குறிப்பிட்ட சமூகத்தாரின் நுண்மையான கலாசாரத்தை அதன் பொருந்தாத விஷயங்களை கிண்டலடித்து திரைப்படம் எடுக்கலாம், நவீன இலக்கியம் உருவாகலாம். நகைச்சுவைத் துணுக்குகள் வரலாம். அந்த சுயபகடியையும் ஏற்றுக் கொள்வதே நாம் முதிர்ச்சியடைந்து கொண்டிருப்பதற்கு அடையாளம்.
இதன் மீதான கிண்டல்கள், சொலவடைகள் ஒரு காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட சமூகத்தில் பரஸ்பரம் புழங்கி வந்தன. அதை சம்பந்தப்பட்ட சமூகத்தினரே கூட அசட்டு சிரிப்புடன் தாண்டி வந்ததும் உண்டு. ‘ஆதாயம் இல்லாத செட்டி ஆத்தோட போவாரா’ என்பது போல.
ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் பெயரை உச்சரித்தாலே அது பதட்டமான சூழலை ஏற்படுத்துகிறது என்றால் நாம் நாகரிக சமூக நகர்விலிருந்து பின்னோக்கி எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே பொருள்.
ஒரு திரைப்படம் வெளிவராமல், அதன் உள்ளடக்கம் பற்றி அறியாமலேயே நாம் பதட்டம் கொள்கிறோம் என்றால் தவறு சாதியின் மீதா, நம்முடைய மனோபாவத்தின் மீதா?”