பெங்களூரு: ஆட்டநேர இடைவெளியில், பந்தை தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு, ஆட்டம் மீண்டும் தொடங்கியவுடன் எங்கே என்று தேடிய நடுவரால், ஆட்டத்தில் சிறிதுநேரம் தடையேற்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள் செய்யும் காமெடியான அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு கூத்துதான், பெங்களூருவில் நடந்த பஞ்சாப் – பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நிகழ்ந்தது.

பெங்களூரு ஆடிய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில், 13வது ஓவர் முடிவில், இடைவேளை நேரம் வந்தது. அப்போது, பந்தை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் நடுவர் ஷம்சுதீன்.

பின்னர், ஆட்டம் தொடங்கியவுடன், பஞ்சாப் அணியின் கேட்பன் அஸ்வின உட்பட பலரும் பந்தைத் தேடுகின்றனர். ஆனால், பந்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. நடுவரோ, பந்து தனது பாக்கெட்டில் இருப்பதையே மறந்துவிட்டார். கடைசியில் புதிய பந்து கொண்டுவரும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், கடைசியில் கேமரா ரீ-பிளேவில்தான் அம்பயர் தனது பாக்கெட்டில் பந்தைப் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போட்டியில், பெங்களூரு அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது.