பாலா இயக்கத்தில் ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்  நாச்சியார் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நடிகர் சூர்யாவால் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பூஜை இன்று நடைபெற்றது.

 

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை  தயாரிக்கிறது.

இன்று  படப்பிடிப்பு தொடங்கியுள்ளதையடுத்து வருகிற செப்டம்பரில் படத்தை  வெளியிட பாலா முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.