மிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான  ரஜினிகாந்துக்கு ஜோடியாக பாலிவுட் பிரபல நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக, கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கூறி உள்ளார்.

ஏற்கனவே பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெற்றிகரமாக ஒடியது.

அதைத்தொடர்ந்து ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் ரஜினிகாந்தே நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது பெயரிடப்படாத அந்த படத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாலிவுட் நடிகை வித்யாபாலன், தமிழக சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து கூறியிருந்தார். அப்போது இதுகுறித்த முழு விவரங்கள் இன்னும் சிறிது நாட்களில் தெரியும் என்றார்.

அதுபோல இயக்குநர் ரஞ்சித்தின் விருப்பமும் வித்யாபாலன்தான்.

வித்யாபாலன் தற்போது நடித்துவரும்  இந்தி படமான ‘பேகம் ஜான்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த படம்  ஏப்ரல் 14ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதையடுத்தே அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.