டில்லி:

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள தாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி அளவிலானது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

வங்கிகளின் பெரிய  வருமானமே கடன்கள்தான். அதனால் கிடைக்கும் வட்டியை கொண்டே அவைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கடன் கொடுத்தால் மட்டுமே வங்கிகள் வட்டி வருவாய் ஈட்ட முடியும். வருவாய் ஈட்டாத எந்த ஒரு கடனும் வாராக்கடன் எனப்படும்.

ஒரு கடனை வாங்கியவர் அதன் வட்டி அல்லது முதலின் தவணை அல்லது இரண்டையும் கடந்த 90 நாட்களை தாண்டியும் கொடுக்கவில்லை என்றால், அது வாராக்கடன் என்று கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகிறது. இது  இந்திய பொருளாதாரத்தை சீர் குலைத்து வருகிறது.  வாராக்கடன்களை வசூலிக்க தேவையான நடடிவடிக்கை எடுக்கப்படுவதில்லை. , இதன் காரணமாக பண முதலைகள் கடன்களை வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி விடுகின்றனர். இதனால் வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வாராக்கடன்களை குறைத்து காட்ட வங்கிகள் பல கோடி ரூபாய் வாராக்கடன் களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளதாக கூறி உள்ளது.

இந்த வாராக்கடன்களில்  80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டிருப் பது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 2016-17 ம் ஆண்டில் 1,08,374 கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2017-18-ஆம் ஆண்டில் 1,61,328 கோடியாக அதிகரித்துள்ளது.

2018-19-ஆம் ஆண்டின் தொடக்க 6 மாத காலத்தில்வங்கிகள் 82,799 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது.

அதுவே 2018-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அபாரமாக 64,000 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளது. அதில் கடந்த 2014-ஆம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 5,55,603 கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட வாராக் கடன்களில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த தகவ்ல பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.