மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற படம் ஐயப்பனும் கோஷியும்.

தற்போது தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் நாக வம்சி கைபற்றியுள்ளார். சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை நித்யா மேனனும் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘பீம்லா நாயக்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், படத்தின் சிறு டீஸரையும் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டர் மற்றும் டீஸர் இரண்டிலுமே பவன் கல்யாண் கதாபாத்திரத்தை மட்டுமே காட்டியுள்ளனர்.

செப்டம்பர் 2-ம் தேதி படத்தின் இசையும், 2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி ‘பீம்லா நாயக்’ படமும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.