ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் மற்றும் ஹாப்பி ஜிபி என்டர்மெண்ட் இணைந்து தயாரிக்கும் வீரப்பனின் கஜானா படத்தை அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

‘ராட்சசி’ படத்தின் இயக்குநர் கவுதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

கோபி துரைசாமி ஒளிப்பதிவில் ஞானேஸ்வரன் இசையமைத்துள்ளார். ஃபேன்டஸி படமாக தயாராகி இருக்கும் வீரப்பனின் கஜானா படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொப்பி , கூலிங் கிளாசுடன் டிடெக்டிவ் போல இருக்கிறார் யோகிபாபு.

இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், தயாரிப்பாளர் தாணுவும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.