தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் அஜித்.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அஜித்.

மாநில அளவிலான வெற்றிக்குப் பிறகு தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார் அஜித்.

இந்தப் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.