டில்லி:

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் குறித்து விசாரித்து வரும் மத்தியஸ்தர் குழு, தனது அறிக்கையை  வரும் வியாழக் கிழமைக்குள் (ஜூலை 25ந்தேதி) தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மனற்ம் உத்தரவிட்டு உள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி  விவகாரம் தொடர்பான  மேல்முறையீடு வழக்குகள்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட  அரசியல் சாசன பெஞ்சு விசாரணை நடத்தியது. அதையடுத்து, மத்தியஸ்தர்கள் குழு அமைத்து, இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க விரும்புவதாக கூறியது. அதன்பேரில்,  முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,  மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் விசாரணை நடத்தி  ஏற்கனவே முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்த நிலையில், மேலும் சில மாதங்கள் அவகாசம் கோரியிருந்தனர்.

மத்தியஸ்தர்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், அவர்களின் அவகாசத்தை ஏற்றுக்கொண்டு, ஆகஸ்டு 15ந்தேதிவரை அவகாசம் வழங்கியது.

இநத நிலையில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் என்பவர்,  உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்தியஸ்தர்கள் குழுவின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும்,  அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  தங்களது கோரிக்கையை குறித்து ஆராய்வேன் என்று நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், அயோத்தி வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்பபோது பேசிய தலைமை நீதிபதி,  “நாங்கள் ஒரு மத்தியஸ்த குழுவை அமைத்துள்ளோம், அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம், அவர்கள்  அறிக்கை சமர்ப்பிக்கட்டும், அதன்பிறகு விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறினார்.

அப்போது முஸ்லிம் சட்டவாரியம் சார்பாக ஆஜரான டாக்டர் ராஜீவ் தவான், “இது மத்தியஸ்தக் குழுவை விமர்சிக்க வேண்டிய நேரம் அல்ல”  அவர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்யுங்கள் என்று  தெரிவித்தார்.

அதையடுத்து,  வரும் வியாழக் கிழமைக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மத்தியஸ்தர் குழுவினரின் அவகாசம் முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று உச்சநீதி மன்றம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.