அப்பல்லோவில் ஜெ.க்கு துணையாக சசிகலா, இளவரசி…

Must read

சென்னை:
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இளவரசியும் மட்டுமே உள்ளனர்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
jaya-sasi-ilava
சிகிச்சைக்குப் பின் தற்போது பூரண குணமடைந்துள்ள ஜெயலலிதா, மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருடன் சசிகலாவும் இளவரசியும் உள்ளனர்.
வேறு எந்த பிரமுகரும், ஜெயலலிதாவை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
பொதுவாகவே, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அவர்களது குடும்பத்தாரை தவிர வேறு எவரையும் அனுமதிப்பதில்லை என்பது நடைமுறை.
எனவே, ஜெயலலிதாவை பார்க்க வேறு யாரையும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

More articles

Latest article