டில்லி:
ங்கியில் பணம் வாங்குபவர் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேர்தலில் ஓட்டு போட்டவுடன் அதற்கு ஆதாரமாக கைவிரலில் மை வைக்கப்படுவதுபோல, வங்கியில் புதிய ரூபாய் மாற்றும்போதும் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
das-main
கடந்த 10ந்தேதியில் இருந்து வங்கிகள், தபால் அலுவலகங்களில் பழைய பணத்திற்கு மாற்றாக புதிய பணம் மாற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வாங்குபவர்களே மீண்டும், மீண்டும் வந்து வாங்கி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரும் பணக்காரர்கள், தங்களிடம் உள்ள வேலையாட்களை மீண்டும், மீண்டும் ஒவ்வொரு வங்கியாக அனுப்பி பணத்தை மாற்றுவதாகவும் தெரிகிறது.
இதைதொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய  பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ்,
தற்போது  நாடு முழுவதும் நிலவி வரும் பணத்தட்டுப்பாடு குறித்தும், வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது.
வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு மையில் மை வைக்கப்படும் .
vote2
பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் கையில் மை வைக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று முதல்  கையில் மை வைக்கும் திட்டம் அமலாகிறது.
கறுப்பு பணம் வைத்திருப்போர், ஆட்களை குழுக்களாக அனுப்பி வைத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கு பணம் கிடைப்பது தாமதமாகிறது.
கறுப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில மக்கள் விரோத சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
பணம் தேவையான அளவு உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை.
சிறிய மதிப்பு கொண்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வழிபாட்டு தளங்கள் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில், பணப்பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.