சென்னை: இரவு நேரங்களில் மின்விநியோகம் தடை செய்வதை தவிருங்கள் என  மின்வாரியத்துக்கு  சென்னை தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான பிரகாஷ் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

(மாதிரி படம்)

தேர்தல் நெருக்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கும் பணியும் ஆங்காங்கே  நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பறந்து சென்றாலும், பல பகுதிகளில் அரசியல் கட்சியினர் எஸ்கேப்பாகி வருகின்றனர்.  இதற்கிடையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மின்விநியோகம் தடை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சமயத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவாகவே மின்விநியோகம் தடை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையொட்டி, சென்னையில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிப்பதை தவிர்க்குமாறு மின்வாரியத்துக்கு தேர்தல் அதிகாரி  பிரகாஷ்  கடிதம் எழுதி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.