சென்னை:
செனனையை அடுத்துள்ள ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு கிடந்தன. இன்று காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
00
தகவல் பரவியதும் அருகில் உள்ள வெங்கடேசபுரம், அம்பேத்கார் நகர், உழைப்பாளர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  ஆர்வத்துடன் வந்து பணத்தை அள்ளிச் சென்றார்கள்.
இந்த பகுதி முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஆனால் அந்த காவல் நிலையத்தினருக்கு மக்கள் பணத்தை அள்ளிச் சென்றது வரை தகவல் தெரியவில்லை.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், “இந்த ஏரியாவில் பணத்தைக் கொட்டும் அளவுக்கு பெரும் பணக்காரர்கள் எவரும் இல்லை.  ராணுவ உயர் அதிகாரிகள் எவரேனும்  பணத்தை கொட்டியிருக்கலாம்” என்கிறார்கள்.
கொட்டப்பட்டிந்த பணத்தின் மதிப்பு  ஒரு கோடிக்கும் மேல்  இருக்கும் என்று கூறப்படுகிறது.