மதுரை:
துரை பழங்காநத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றுபவர் மாரிமுத்து.  பேருந்து நடத்துனர்கள் கொடுக்கும் கலெக்‌ஷன் தொகை தினமும் 10 முதல் 13 லட்ச ரூபாய் வரை வரும்   நடத்துனர்கள் 100, 50, 20, 10, சில்லறை என கொடுக்கிறார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

ஆனால், பொன்மேனியில் உள்ள  ஐஓபி வங்கியில் இந்தத் தொகையை பழைய  500, 1000 ரூபாயாக செலுத்துகிறார்  மாரிமுத்து.
இதை அறிந்த நடத்துனர்கள் மற்றும்  ஓட்டுநர்கள்,”அமைச்சர் செல்லூர்ராஜூவுக்கு மேலாளர் மாரிமுத்து நெருங்கியவர். அமைச்சருக்காக இவர் ண மாற்றம் செய்து தருகிறார்” என்று குற்றம் சாட்டியதோடு, பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று கூறி  நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
போராட்டம்
போராட்டம்

இதையடுத்து, “இனி இதுபோல தவறு செய்ய மாட்டேன்” என்று மேலாளர் மாரிமுத்து மன்னிப்பு கேட்டுக்கொள்ளவே மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.