தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் – வானிலை மையம் தகவல்

Must read

vani
தமிழகத்தில் கோடைக்காலத்தின் உச்சகட்ட  அனல் வீசும்  அக்னி நட்சத்திர காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்கப்போகிறது.  கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டின் கத்திரி வெயில் சீசன் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் தற்போதுள்ள வெப்பநிலையை விட மேலும் அதிகரிக்கும். தற்போது உள்ளதைவிட 2-3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையைப் பொருத்து வெப்பநிலை மாறுபடும். சென்னையைப் பொருத்தவரை வெப்ப நிலை அதிகரிக்கும். தற்போதைககு மழைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

More articles

1 COMMENT

Latest article