72 வயதில் குழந்தைக்கு தாயான பஞ்சாப் பெண்மணி

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

ivrs 272 வயதில் டெஸ்ட் டுயூப் குழந்தைக்கு தாயான பஞ்சாப் பெண்மணி
தல்ஜிந்தெர் கவுர் என்பருக்கு திருமணமாகி 46 வருடங்களுக்கு பிறகு , மெனோபாஸ் நின்று 20 வருடங்களுக்குப் பிறகு ஏப்ரல் 19ம் தேதி ஆண்குழந்தை பிறந்துள்ளது.
கவுரின் 79 வயதான கணவர் மோகிந்தர் சிங் கில். விவசாயியான இவர் கடந்த 2013 முதல் கவுருடன் இணைந்து பஞ்சாபில் உள்ள அம்ரித்சரில் இருந்து ஹர்யானாவில் உள்ள ஹிசார்க்கு தொடர்ந்து பயணித்து இந்த குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
இரு முறை தோல்விக்குப் பின்னர், மூன்றாம் முறையாக கடந்த ஜூலையில் கருத்தரித்தார். இவரது கணவனின் விந்தில் இருந்தே டெஸ்ட் டியூப் மூலம் கரு உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஹிசாரில் உள்ள தேசிய கருத்தரிப்பு மையம் மற்றும் டெஸ்ட் டியூப் குழந்தை மையத்தின் உரிமையாளரான மருத்துவர் அனுராக் பிஷோனி கூறுகையில், “2013ல் இந்தப் பெண்மணி வந்த போது இவரை புறக்கணிக்கவே முயன்றேன். காரணம் அவர் மிகவும் நலிவடைந்து இருந்தார். “என்றார்.

இந்த மருத்துவமனையில் 70 வயதுப் பெண்மணி டெஸ்ட் டியூப் குழந்தை பெறுவது இது இரண்டாம் முறை ஆகும். ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு ராஜோ தேவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து இருந்தார். (விந்து நன்கொடை மூலம்)
2008ஆம் ஆண்டு 66 வயதான பெண்மணி மூன்று குழந்தையைப் பெற்றார்.
வயதான பெண்மணிகளை தாஇ ஆக்குவதில் எங்கள் வெற்றிவிகிதம் நன்றாகவே உள்ளது. எல்லாப் பெண்களும் தாயக முடியாது. அவர்கள் உடற்தகுதியை பரிசோதித்த பிறகே நாங்கள் சிகிச்சையை தொடங்குவோம் என்றார்.
அதிஷ்டவசமாக இந்த 72 வயது கவுல் தாயாகும் உடற்தகுதியுடன் இருந்தார்.
இருதய நிபுணரின் பரிந்துரைக்குப் பிறகே இவருக்கு சிகிச்சை துவங்கப் பட்டது.
ivr mother 1ஏப்ரல் 19 ஆம் தேதியன்று 2 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. தங்களது வாழ்நாள் கனவு நிஜமானதில் கணவன் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் மறைவிற்கு பிறகு, கடவுள் தங்களின் குழந்தைக்கு நல்ல வழி காட்டுவார் என்று தம்பதியினர் நம்புகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னால் ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை பார்த்து மருத்துவரை நாடியதாக தெரிவித்த இவர்கள், எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தங்கள் வாரிசை ஆசிர்வதிப்பார் என்கின்றனர்.
 
 

More articles

Latest article