மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு – 4 பேர் பலி, 3 பேர் காயம்

Must read

kundu
மேற்கு வங்கம், மால்டா மாவட்டத்தில் ஜாய்ன்பூர் கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சரியாக நேற்றிரவு 11.30 நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிந்த 4 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று மேற்கு வங்கத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிகழ்ந்தது. அதில் 78.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவன்று வன்முறையில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு நடந்த இச்சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More articles

Latest article