IPL 2016 யின் போட்டியில் , நேற்று புனேவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயந்தஸ் அணிக்கும் நடைபெற்றது. இது வரை 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்த நிலையில், புனே அணிக்கு மிக முக்கியமானது , நேற்று வலுவான மும்பை அணியை புனே எதிர்க்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
bumrahfb-storyu_647_040816015733புனே அணிக்கு இதுவரை சிறப்பாக விளையடிய ரஹானே சொற்ப ரன்கள் எடுத்து அவுட் ஆக ,களம் இறங்கிய ஸ்மித் திவாரி ஜோடி ஓவருக்கு 10 ரன் வீதத்தில் பேட்டிங் செய்தனர். ஸ்மித் பும்ராஹ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு புனே அணி ரன்கள் எடுக்க திணறினர். தோனி யின் ஆட்டம் இந்த போட்டியில் எடுபடவில்லை . பும்ராஹ் மற்றும் மும்பை அணியின் பௌலர்கள் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீச புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. புனே அணிக்கு அதிகப்பட்சமாக திவாரி 57 ரன்கள் மற்றும் சுமித் 23 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தனர்.
rsafp2160 ரன்கள் இலக்குடன் மும்பை களமிறங்கியது. மும்பை அணி அதிரடியாக ரன்களை குவித்தனர். பார்திவ் படேல் திண்ட வீசிய ஓவரில் மூன்று பௌண்டரிகள் அதிரடியாக அடிக்க மும்பை அணியின் ஸ்கோர் ரன் ரேட்க்கு நிகராக இருந்தது . பார்திவ் அவுட் ஆக ரோஹித் உடன் களமிறங்கிய ராயுடுவும் தன் பங்கிற்கு 22 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மும்பை அணி 18.3 ஓவரில் 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 85 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.