வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

Must read

manu
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் நளைமுதல் 29 ஆம் தேதிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான 29 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் வரும் வேட்பாளர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கி வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது அவர்களுடன் மூன்று வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் முன்பாக அந்த வாகனங்கள் நிறுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.,

More articles

Latest article