மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக கார் இல்லையாம்!

Must read

durga
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் சொந்த வாகனம் ஏதும் இல்லை என தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-15 ஆண்டில் ரூ. 13.23 லட்சம் வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் கைவசம் ரூ. 50,000 ரொக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி துர்கா ரூ. 25,000 ரொக்கமாக வைத்துள்ளார்.
தன்னிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தங்க, வெள்ளி நகைகளும் இல்லை என கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி துர்கா வசம் 720 கிராம் மதிப்புள்ள பழைய தங்க நகைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலினிடம் ரூ. 80.33 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்தும், மனைவி துர்காவிடம் ரூ. 31.25 லட்சம் மதிப்பிலான சொத்தும் உள்ளது.
அசையா சொத்தாக திருவள்ளூர் மாவட்டத்தில் 3.85 ஏக்கர் நிலமும், தஞ்சாவூரில் பூர்விக நிலம் 2.86 ஏக்கரும் ஸ்டாலினுக்கு உள்ளது. குடியிருப்பு கட்டடமாக வேளச்சேரியில் 2687 சதுர அடியில் வீடு உள்ளது. அதில் மனைவிக்கு 50 சதவீதம் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தனக்கு கடன் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலைப் பொருத்தவரையில் பொது சேவை என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தனது மனைவி துர்கா நிறுவன இயக்குநராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article