மெல்போர்ன்: ஆஸி. – நியூசி. அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 467 ரன்கள் எடுத்த நிலையில், மூன்றாம் நாளான இன்று நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்து ஆடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி அணியின் டிராவிஸ் ஹெட் 114 ரன்களை அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், டிம் பெய்னே 79 ரன்களும், மேத்யூ வேட் 38 ரன்களும் அடிக்க, 467 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதேசமயம், அந்த அணியினர் மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூசி. தரப்பில் வேக்னருக்கு 4 விக்கெட்டுகளும், டிம் செளதிக்கு 3 விக்கெட்டுகளும், கிராண்ட்ஹோமிற்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.

பின்னர் களமிறங்கிய நியூசி. அணியில், துவக்க வீரர் டாம் லோதன் மட்டுமே 50 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டினார். மற்றபடி, டாம் பிளெண்டல் மற்றும் கிராண்ட்ஹோம் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர்.

ஆஸியின் பேட் கம்மின்ஸ் மிரட்டலாக பந்துவீசி 4 விக்க‍ெட்டுகளையும், பேட்டிஸன் 3 விக்க‍ெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.