லண்டன்: இலங்கை அணி வெற்றிபெற 335 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இலங்கை – ஆஸ்திரேலிய அணிகள் ஆடும் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 334 ரன்களை விளாசிவிட்டது. கேப்டன் ஆரோன் ஃபின்ச், 132 பந்துகளில் 153 ரன்களை அடித்தார். ஸ்மித் தன் பங்கிற்கு 73 ரன்களை அடித்தார். அவர் செலவழித்த பந்துகள் 59.

மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 46 ரன்களை அடித்தார். இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் சோபிக்கவில்லை. 48 பந்துகளை சந்தித்த அவர் 26 ரன்களை மட்டுமே அடித்தார்.

இலங்கை தரப்பில் இசுரு உடனா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். லசித் மலிங்கா டேவிட் வார்னரின் விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் அவுட் ஆனார்கள். மொத்தமாக 7 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.