லகம் முழுவதும் வாழும் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா ஓட ஓட விரட்டியடிக்குமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு  காத்திருக்கின்றனர்.

நடப்பு ஆண்டுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 22வது லீக் ஆட்டம் நாளை மாலை 3 மணிக்கு மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில்  இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

இதுவரை நடைபெற்ற அனைத்து உலக போட்டிகளின்போதும், பாகிஸ்தானை விரட்டியடித்த இந்தியா, நாளைய போட்டியிலும் பாகிஸ்தானை பந்தாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு உள்ளனர்.  இந்த போட்டி வெறும் விளையாட்டு போட்டி மட்டும் அல்ல. இரு அணிகளுக்கும் இடையில் நடக்கும் போர் என்றே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை, ரசிகர்கள் உணர்ச்சிப் பூர்வமாக பார்க்கின்றனர். இதனால் மற்ற அணிகளிடம் தோற்றாலும் பரவாயில்லை, பாகிஸ்தானிடம் தோற்றுவிடக்கூடாது என எண்ணத்துடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளால் இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் உள்பட எந்தவொரு போட்டிகளும் நடைபெறுவது இல்லை. ஆனால், உலக கோப்பை போட்டி சர்வதேச போட்டி என்பதால், அதில் இரு நாடுகளும் மோதிக்கொள்ள உள்ளது. இதன் காரணமாக ரசிகர்களின்  எதிர்பார்ப்புகளும் எகிறி உள்ளது.

சுமார் 26 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் இந்த மைதானத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் பிளாக்கில் அதிகவிலைக்கு டிக்கெட்டு விற்று வருவதாகவும் கூறப்படுகிறது.   டிக்கெட் விற்பனை குறைந்த பட்சம் ரூ.20,000 லிருந்து ரூ.60,000 வரை விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் . இந்த உலகக்கோப்பை தொடரில் மழையால் 4 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய போட்டி நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது.

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டி குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்த  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக செயல் படுத்துவோம். இந்த  போட்டி குறித்த பரபரப்புகள் புதிய வீரர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும்.  எனவே நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டி, இந்திய வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளைய போட்டியை காண  இப்போதே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்…