கான்பெரா: இந்தியா நிர்ணயித்த 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்த ஆஸ்திரேலியா, ஆடத்தை சற்று அதிரடியாக துவக்கினாலும், 10 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்த நிலையில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.

நன்றாக ஆடிவந்த கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கைப்பற்றினார். பின்ச் 26 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார். பின்னர், களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தையும் சாஹலே காலி செய்தார். ஸ்மித் அப்போது 9 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

அதன்பிறகு, களமிறங்கிய முக்கிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை நடராஜன் எல்பிடபிள்யூ முறையில் எடுத்தார். மேக்ஸ்வெல் அப்போது 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த 3 விக்கெட்டுகளும் குறுகிய இடைவெளியில் விழுந்தன.

தற்போது, துவக்க வீரர் ஆர்கி ஷார்ட்டும், ஹென்ரிக்யூஸும் களத்தில் உள்ளனர். மேலும் 2 விக்கெட்டுகளை இந்திய அணி விரைவாக கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி பெரியளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.