3வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவு – ஆஸ்திரேலியா 166/2

Must read

சிட்னி: இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்க‍ெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்துள்ளது.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில், முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி, இந்தப் போட்டியில் மீண்டு வந்துள்ளதாய் காட்சியளிக்கிறது.

துவக்க வீரர் புகோவ்ஸ்கி 62 ரன்களை அடித்து அவுட்டானார். டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஆனால், மார்னஸ் லபு‍ஷேனும், ஸ்மித்தும் தற்போது களத்தில் உள்ளனர். மார்னஸ் 67 ரன்களை அடித்திருக்க, ஸ்மித் 31 ரன்களுடன் உள்ளார்.

இவர்களை, நாளை காலையில் விரைவில் ஆட்டமிழக்க செய்துவிட்டால், இந்திய அணி, போட்டியை தன் பக்கம் திருப்ப வாய்ப்புள்ளது. மாறாக, நிலைமை வேறுமாதிரி ஆகிவிட்டால் ஆஸ்திரேலியாவின் ரன் எண்ணிக்கை வேறு லெவலுக்கு சென்றுவிடும்.

இன்றையப் போட்டியில், ஜடேஜாவை மிகவும் தாமதமாகவே பந்துவீச அழைத்தார் கேப்டன் ரஹானே.

 

 

More articles

Latest article