சென்னை:
பிரபல நகைச்சுவை நடிகரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி கடந்த ஆறாம் தேதி மறைந்தார். அவர்  ஆசிரியராகவும் இருந்து நடத்திவந்த துக்ளக் இதழ் தொடர்ந்து வெளிவருமா என்ற கேள்வி எழுந்தது.
இன்றும் பல்லாயிரம் வாசகர்களைக் கொண்டு, வார இதழாக வெளிவருகிறது துக்ளக் இதழ்.
இந்த நிலையில், இவ்விதழின் ஆசிரியராக, ஆடிட்டர் குருமூர்த்தி பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.