ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான ஏல நடைமுறையை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறவுள்ளதாகவும் இம்முறை துபாயில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்போ அல்லது அணியின் உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கையோ இதுவரை வரவில்லை என்ற நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இதுகுறித்து உறுதியாக தெரியவரும்.
தவிர, கடந்த ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்ததை அடுத்து இந்த ஆண்டும் WPL லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆண்களுக்கான IPL கிரிக்கெட் தொடர் போல பல்வேறு நகரங்களில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.