சென்னை

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா மோதுகின்றன.

இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாகத் தோற்று சிக்கலில் தவிக்கிறது.

எனவே எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். இதில் ஏதாவது ஒன்றில் தோற்றாலும் பாகிஸ்தான் அணி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது.

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி 4-ல் வெற்றி அதாவது இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேசத்துக்கு எதிராக வெற்றி மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக ஒரு தோல்வி என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்

அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், ஷதப் கான், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.

தென் ஆப்பிரிக்கா:

குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது லிசாத் வில்லியம்ஸ்.