மேஷம்

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் வாரம் இது. நம்பி வந்தவர்களுக்குக் கைகொடுத்து உதவுவீங்க. குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும்.  வருமானம் திருப்தி தரும். தாயாருக்கு உங்களாலும் உங்களுக்குத் தாயாராலும் நன்மைகள் ஏற்படும்.வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீங்க. உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும்.  தன வரவு ஏற்படக்கூடிய சிறப்பான வாரம். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் நிச்சயமாகும். தாய் வழி சொந்தங்களால் குடும்பத்தில் புதிய திருப்பம் உண்டாகும். தொழில் செய்பவர்கள், பணத் தட்டுப்பாடு உண்டாவதைத் தவிர்க்க முடியாது. ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் கவனிப்பது நல்லது. அடுத்தவர் வேலையைச் செய்யும்படி சொன்னால் பணிவாக மறுத்துவிடுங்கள். உங்கள் வேலையை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க.

ரிஷபம்

கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடும். குடும்ப வருமானம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எந்தக் காரியத்தையும் பதற்றப்பட்டோ,  அவசரப்பட்டோ செய்ய வேண்டாம். வழிபாடுகளில்  அதிக நம்பிக்கை வைப்பீங்க.  உங்களுக்கு நன்மை தரக்கூடிய வாரம் இது. தந்தைக்குட்ப பெரிய நன்மை நிகழும். உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு கட்டாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சக ஊழியர்களால் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும்படியாக அவர்கள் இறங்கி வந்து சமாதானம் செய்வாங்க. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. ஆரோக்கியத் தொல்லை ஏற்படாதபடி அனைத்து வகைகளிலும் கவனமாக இருப்பது நல்லது.  உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபார இடங்களில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

மிதுனம்

சாமர்த்தியமான செயல்களால் மத்தவங்க மனசுல இடம் பிடிப்பீங்க. மாணவர்கள் பாடத்திலும் பணியாளர்கள் பணியிலும் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். இருந்தாலும் எடுத்த பணியை முடிச்சுடு வீங்கப்பா. உத்தியோகம் காரணமாக வெளியில் சுற்ற நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. ஃபேமிலியில் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடருவீங்க. சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவாங்க. குடும்பத்துல இருந்துக்கிட்டிருந்த பிரச்சினைங்க தீரும். திருமணக் காரியங்கள் கைகூடும். பொதுவாவே எல்லா எடத்துலயும் எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட விஷயம் சக்ஸஸ்ஃபுல்லா நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். வாக்குவன்மை அதிகரிக்கும். அதாவது… ஆபீஸ்ல, ஸ்கூலில், காலேஜில், பொது இடத்தில் பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீங்க.

கடகம்

கணவன் மனைவிக்கிடையில் திடீர்னு கருத்து வேற்றுமை உண்டாகலாம். ஆனா அது மாதிரியே திடீர்னு அந்த சண்டை முடிவுக்கும் வந்துரும்ங்க. லேடீஸுக்கு பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த மந்த நிலை மாறும். நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லதுங்க. என்றைக்கோ செய்த இன்வெஸ்ட்மென்ட்ஸ் இப்போ லாபம் தரும். பதற்றம் அவசரம் இன்றிச் செயல்கள் செய்வது நன்மை தரும். பி கேர்ஃபுல் பா.  சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் எடுக்காதீங்க. மறைமுக எதிர்ப்புகள் விலகும். கௌரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சினை தீரும். உத்தியோகத்துல இருக்கறவங்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக வேனும் பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீங்க.

சிம்மம்

பிள்ளைங்களை மற்றவங்க பாராட்டுவதால் பெருமை உண்டாகும். திடீர் குட் நியூஸ் வருவதால், கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். ஃபேமிலியில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். லேடீஸுக்கு வீண் செலவு குறையும். கலைத்துறையினருக்கு திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் காரணமா நல்ல ரிஸல்ட் கிடைக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகைலயும் நன்மைகள் ஏற்படலாம். தொழிலிலும் உத்யோகத்துலயும் பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகமாகி நன்மைகள் ஏற்படும். லாபமும் நல்லபெயரும் உண்டாகும்.  பார்ட்னஸ் கிட்ட பொறுமையாப் போகணுங்க. பிஸினஸ் பார்ட்னரானாலும் சரி.. லைஃப் பார்ட்னரானாலும் சரி.. அட்ஜஸ்ட் செய்ங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 26 முதல் அக்டோபர் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும்

கன்னி

ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீங்க. செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில், பிசினஸில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விடக் குறைவாதாங்க இருக்கும். தொழில், பிசினஸ் தொடர்பா கொஞ்சம்  அலைச்சல்களும் ஏற்படும். சொல்லிலும், செயலிலும், மற்றவர்களை நம்புவதிலும் கேர்ஃபுல்லா இருப்பது அவசியம். டோன்ட் பிலீவ். சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் எடுக்காதீங்க. இந்த வாரம் புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிறப்பான உடை அணிந்து மிடுக்கா உலா வருவீங்க. வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. பட் கஷ்டமோ கவலையோ ஆட்டி வைக்காதுங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும்

துலாம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். ஆனாலும் அதனால் பொறுப்பும் அதிகமாகும். பல நாட்கள் வராமல் இருந்த பணம் வந்து சேரும். ஃபேமிலியில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். லேடீஸுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். அதிகாரிங்ககிட்ட வாக்குவாதம் செய்ய வேணாங்க. செய்தால் அபராதம் கட்ட நேரலாம். சிலருக்கு முன்பு ஏற்பட்ட தோல் உபாதைகள் சரியாயிடும். மேடைப் பேச்சாளர்கள் தங்களோட பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும்

விருச்சிகம்

கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணத்தேவை உண்டாகலாம். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் வேகம் காணப்படும். இந்த வாரம் செலவு அதிகரிக்கும். நன்மைகள் ஏற்படும். நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். மத்தவங்களோட செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லதுங்க. பணம் கொடுக்கல்வாங்கலில் கவனமா இருங்கப்பா. தொழில், பிசினஸ் மூலம் லாபம் அதிகம் வரும். யெஸ். யூ வில் கெட் மோர் பிராஃபிட். இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

சந்திராஷ்டமம் : நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும்

தனுசு

பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி, பிடிப்பு உண்டாகும். வாரக்கடைசியில் எதிர்பார்த்த குட் நியூஸ் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் பிசினஸ் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு, வீண் அலைச்சல் வார ஆரம்பத்தில் அதிகரித்தாலும் போகப்போகச் சரியாகும். செம்ம ஜாலியா வாழ்க்கை ஓடும். என்ஜாய். ஃபேமிலியில இருக்கறவங்களோட இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். வேலையாட்களை பொறுமையுடன் அணுக வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானம் ஏற்படும். தொழில் துறை சீராக இருக்கும். அசாத்திய துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீங்க. மேலதிகாரிகளின் ஆதரவு ஊக்கத்தைக் கொடுக்கும்.

மகரம்

பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். லேடீஸுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ராசியைச் சேர்ந்த அனைவருக்குமே நல்ல மாற்றங்கள் வந்து சேரும். யெஸ். வெரி குட் சேஞ்சஸ். கவலையால் உடல் நலம் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வீண் அழைச்சலையும் பணச் செலவையும் வெளியூர்ப் பயணங்கள் ஏற்படுத்தும். ஊக்கத்துடன் வியாபாரத்தைக் கவனிப்பீங்க. கமிஷன் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீங்க.. அடுத்தவர் விஷயங்களில் தலையிடாதீர்கள். வாகன விபத்துகளைச் சந்திக்க நேரிடும். கணவன் மனைவி உறவில் இருந்துக்கிட்டிருந்த கசப்பான போக்கு மாறி இனிமை மெல்ல எட்டிப்பார்க்கும். அமைதி நிலவும் வாரம். பொழுதுபோக்கில் கவனம் கூடும்.

கும்பம்

குழந்தைங்களை மன்னிச்சு ராசியாயிடுவீங்க. ஹெல்த்தை ரொம்ப கவனமாப் பார்த்துக்குங்க. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லதுங்க.  தொழில் பிசினஸ் சுமாராக நடக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீங்க. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தராதீங்க. ரிஸ்க் எடுக்காம அமைதியா இருந்தா பிழைச்சீங்க. நெருங்கினவங்களை ஒதுக்கிட்டு இப்போ வருத்தப்பட்டுப் பயனில்லை.

மீனம்

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் பிசினஸ் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். ஃபேமிலியில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். உங்க செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். யெஸ். யூ வில் பி ஹாப்பி. எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவாங்க. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். குடும்பத்துல இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.