டில்லி,

ந்தியாவின் தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ வலைதளம் ஹேக் செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது, தேசிய பாதுகாப்பு படையின் வலைதளத்தை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெற்றது. ஆனால், நமது சைபர் நிபுணர்கள் அதை உடனடியாக கண்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு படை வலைதள முகவரியான www.nsg.gov.in உடனடியாக தீவிரவாத தடுப்பு படையினால் தற்காலிகமாக  அதன் தலைமையகத்தில் வைத்து முடக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக நமது வலைதளம் பாதுகாக்கப்பட்டது.

ஹேக்கிங் முயற்சியில் ஈடுபட்ட ஹேக்கர்கள் அலோன் இன்ஜெக்டர் என தங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.  மேலும், வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ள னர்.

இந்த ஹேக்கிங் முயற்சியானது பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஹேக்கர்களால் நடத்தப்பட்டி ருக்க கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ஹேக்கர்கள் குறித்து உண்மையான விவரங்களை உறுதி செய்யும் முயற்சியில் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் வலைதளம் பராமரிக்கப்பட்டு வந்ததுடன், படை, அதன் பூர்வீகம், நடவடிக்கைகள் பற்றிய அடிப்படை தகவல்களையும் வழங்கி வந்துள்ளது.

இந்த ஹேக்கிங் தகவல், தேசிய தகவல் மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வளைதளத்தை சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.