சென்னை:  ஏடிஎம் இயந்திரத்தில் தீ

Must read

சென்னை,
டசென்னை கொடுங்கையூர் அருகில் உள்ள முத்தமிழ் நகர் வடக்கு தெருவில் உள்ள ஏடிஎம் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
atm-2
முத்தமிழ்நகர் வடக்கு தெருவில் வீட்டின் ஒரு பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இன்று காலை சுமார் 10 மணி அளவில் ஏடிஎம் இயந்திரத்திற்குள் இருந்து புகை வந்துள்ளது. சற்று நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தினுள் தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.  சிறிது நேரத்தில் ஏடிஎம் இயந்திர அறை முழுவதும் தீ எரிய தொடங்கி, அறைக்கு வெளியே ரோட்டோரத்தில் இருந்த பைக்குக்கும் தீ பரவியது. இதில் இரண்டு பைக்குகள் எரிந்து நாசமாயின.
இதை பார்த்த அருகில் உள்ள கடைக்காரர்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் உடனே வந்து தீயை அணைத்தனர்.
atm-2
இயந்திரத்திற்குள் இருந்த பணம் தீயில் எரிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்திற்குள் தீ பிடித்தது நாச வேலையா அல்லது மின்சார பழுது காரணமா என்று தெரியவில்லை. இயந்திரத்திற்குள் எவ்வளவு எவ்வளவு இருந்தது என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article