ஐ.எஸ்.எல்: கொல்கத்தா – கேரளா போட்டி ட்ராவில் முடிந்தது

Must read

luke4225-1480443641-800இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா – கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் விளையாடினர். 8-ஆவது நிமிடத்தின் போது செட்ரிக் பந்தை பாஸ் செய்ய அதை கேரளா சார்பாகா தலையில் முட்டி கோலாக்கினார் கேரள வீரர் வினீத். 18-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியும் பதிலுக்கு கோல் போட்டு சமன் செய்தது. கொல்கத்தா அணி வீரர் பியர்சன் அந்த கோலை அடித்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் ட்ரா ஆனது.

More articles

Latest article