cyaz7mhuaaeqeuiஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

ஹாக்கி போட்டியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் இந்தியா விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இரு அணிகளும் ஒருவருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என சம பலத்துடன் மோதினர். இதனால் முதல் 15 நிமிடங்கள் வரை யார் முதலில் கோல் அடிப்பார்கள் என ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. 19-ஆவது நிமிடத்தில் இந்தியா கோல் கணக்கை துவங்கியது. அஃப்ஃபான் யூசுப் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார். ஆஸ்திரேலியா முதல் கோல் அடிக்க முக்கியது. அதற்குள் இரண்டாவது கோலை மீண்டும் யூசுப் அடித்தார்.

ஒருவழியாக மேத்தியு வில்லிஸ் ஆஸ்திரேலியா சார்பாக 36-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் மானத்தை காப்பற்றினார். 43-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆஸ்திரேலியா இரண்டாவது கோல் அடித்து நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிருபித்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சிக்கு அடுத்த நிமிடமே இந்திய வீரர் ரகுநாத் உளை வைத்து விட்டார். 44-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் இந்திய அணி, 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.